அமுதநிலை படலம்

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை உலகில் பெறும் இன்பங்களில் எல்லாவற்றிலும் சிற்றின்பமே தலையானதாக கருதப்படுகிறது. இவ்வகையில் தமிழன் அக இலக்கணம் வகுத்து காதல் சுவையை நாகரிக நயத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நுகர்ந்து வந்துள்ளான்.

இந்நிலையில் பெண்ணிடம் ஆண் வேண்டி வரும்போது திரிபின்றி தன்னியல்பால் அவள் ஒத்துழைப்பாளானால் அதுவே பெரும் பேறாகும்.  இது அவள் உடல்நிலை, மனநிலை, மற்றும் சந்திரன் இயக்கத்தையும் பொறுத்தது.  சந்திரன் செவ்வாய் சேர்க்கை, பார்வை, பெண்ணின் பிறப்பு ராசிக்கு இவற்றில் தொடர்பு இவற்றை அனுசரித்து ஒவ்வொரு மாதமும் சந்திர இயக்கத்தால் பாதிக்கப் பட்டு மாதவிலக்கு வருகிறது.

இந்நிலையில் வளர்பிறை, தேய்பிறைகளில் ஒவ்வொரு திதியிலும் பெண்ணின் உடலின் உணர்ச்சி வேகங்கள் (அமுதநிலை), எதிர்மறை உணர்வுகள் (நச்சுநிலை), குறிப்பிட்ட ஒவ்வொரு உறுப்பிலும் மையங்கொண்டு இயங்குவதை நம் சித்தர்கள் கண்டுணர்ந்தனர். இதுவும் பஞ்ச பூத தத்துவதின் அடிப்படையில் இயங்குகிறது. இதற்கும் பஞ்ச பட்சி அமைப்புக்கும் தொடர்புகள் இருக்கிறது.